​​​​​​​நகர்ப்புற வாழ்வாதாரம்
பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்டம் (SJSRY))

நகர்ப்புற ஏழைக் குடும்பங்கள் சுயதொழில் மற்றும் கூலித் தொழிலுக்கான முயற்சிகள் மேற்கொள்வதன் மூலம் இலாபகாரமான வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தரவும், நிலையான நீடித்த வருவாயை உருவாக்கவும் மத்திய, மாநில அரசுகளின் பங்கேற்புடன் கூடிய பொன் விழா ஆண்டு நகர்ப்புற வேலை வாய்ப்பு திட்ட நிதி பயன்படுத்தப்படுகிறது. இத்திட்டத்திற்கான நிதியை மத்திய, மாநில அரசுகள் முறையே 75:25 என்ற விழுக்காட்டில் பகிர்ந்தளிக்கின்றன.

பின்வரும் தலைப்புகளில் துணை ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது.

நகர்புற சுய வேலைவாய்ப்பு திட்டம் (USEP)

நகர்ப்புறங்களில் வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் தனி நபர்கள், லாபகரமான சுயதொழில் மேற்கொள்ள, இந்த உப திட்டம், மானியத்துடன் கூடிய கடன் வழங்க வழி செய்கிறது. பயனாளிகளுக்கு தொழில் நுட்பம், சந்தை மேம்பாடு, கட்டமைப்பு வசதிகள் மற்றும் பிற அறிவுசார் உதவிகள் அளிக்கப்படுகின்றன.

நகர்ப்புற பெண்களுக்கான சுய உதவித் திட்டம் (UWSP)

இந்த உப திட்டத்தின் கீழ், நகர்ப்புற ஏழை பெண்களை உறுப்பினர்களாகக் கொண்ட சுய உதவிக் குழுக்கள் மற்றும் சிக்கன மற்றும் நாணயச் சங்கங்களுக்கு லாபகரமான சுய தொழில் மேற்கொள்ள, மானியத்துடன் கூடிய சுய நிதி மற்றும் கடன் வழங்கப்படுகிறது.

நகர்ப்புற ஏழைகளுக்கு வேலைவாய்ப்பை மேம்படுத்தும் திறன் வளர்ப்பு பயிற்சித் திட்டம் (STEP-UP)

இந்த துணை திட்டம், நகர்ப்பு ஏழைகள் தங்களது தொழில்நுட்ப தகுதியை மேம்படுத்துவதன் மூலம், தகுந்த, சுய தொழில் அல்லது ஊதியத்துடன் கூடிய வேலை வாய்ப்பினை பெறுவதற்குத் தேவையான தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது.

நகர்ப்புற கூலி வேலை வாய்ப்புத் திட்டம் (UWEP)

நகர்ப்புற ஏழைகளின் உடல் உழைப்பைப் பயன்படுத்தி, சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டிற்கான பொது சொத்துக்களை உருவாக்குவது இத்துணைத் திட்டத்தின் நோக்கமாகும்.

நகர்ப்புற சமுதாய மேம்பாட்டு கூட்டமைப்பு (UCDN)

அண்டை வீட்டு குழுக்கள், அண்டை வீட்டுக் குழுமங்கள் மற்றும் சமுதாய வளர்ச்சி சங்கங்கள் போன்ற சமுதாய அமைப்புகளை உருவாக்கி அதன் மூலம் நகர்ப்பு​ப் பகுதியில் வறுமையை ஒழிப்பது என்ற கோட்பாட்டினை இந்த துணைத் திட்டம் ஆதாரமாகக் கொண்டுள்ளது.

இத்திட்டத்தின் முக்கிய கூறுகளின் 2012-13 ஆம் ஆண்டு முன்னேற்ற விவரம் கீழ்க்கண்டவாறு.

urban live.png ​

நகர்ப்புற சமுதாய முன்னேற்ற அமைப்பு (UCDN) திட்டத்தின் கீழ் அண்டை வீட்டுக் குழு (NHG), அண்டை வீட்டு குழுமம் (NHC), சமூக மேம்பாட்டு சங்​கம் (CDS) ஆகிய மூன்று நிலை கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 80,956 அண்டை வீட்டுக் குழுக்களும், 9,364 அண்டை வீட்டு குழுமங்களும், 780 சமூக மேம்பாட்டு சங்கங்களும் உருவாக்கப்பட்டு சிறந்த முறையில் இயங்கி வருகின்றன.

நகர்ப்புற மனிதவளப் புள்ளியியல் மற்றும் மதிப்பீடு (USHA)

குடிசை பகுதியில் வாழும் வறுமை கோட்டிற்கு கீழே உள்ள ஏழைகளுக்கான தேவை கணக்கெடுப்பு மூலம் திட்டமிடுதல், கொள்கை ஏற்படுத்துதல், திட்ட வடிவமைத்தல், வகைப் படுத்தல், செயலாக்கம், கண்காணித்தல் மற்றும் மதிப்பிடுதல் ஆகியவை இத்திட்டத்தின் தலையாய நோக்கம் ஆகும்.

கணக்கெடுப்பு மக்கள் தொகை 1 லட்சத்துக்கு மேல் உள்ள 34 நகராட்சிகளில், முதற்கட்டமாக 33 நகராட்சிகளில் பணி நிறைவு பெற்றுள்ளது. அதில் 1963 குடிசைப்பகுதிகள் மற்றும் 413000 குடிசை வீடுகள் அடங்கும். மேலும் இரண்டாம் கட்டமாக 40 ஆயிரம் முதல் 1 லட்சம் மக்கள் தொகை கொண்ட 60 நகராட்சிகளில் ரூ.2.62 கோடி செலவில் கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம் (TNULM)

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதாரத் திட்டம்’ ரூ.200 கோடி ஒதுக்கீட்டில் 2012-13ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. நகர்ப்புற ஏழைகளுக்கு குறிப்பாக தெருக் குழந்தைகள், வீடற்றவர்கள் போன்ற மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய பிரிவினருக்கான சிறப்பு இல்ல வசதிகள் ஆகியவற்றை உள்ளடக்கி வாழ்வாதாரப் பாதுகாப்பினை வழங்க இத்திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தெருக் குழந்தைகள், வீடற்றவர்கள் போன்ற மிகுந்த பாதிப்புக்குள்ளாகக் கூடிய பிரிவினருக்கான சிறப்பு இல்ல வசதிகள் ஆகியவற்றை வழங்க தற்போதுள்ள பல்வேறு திட்டங்களையும் ஒருங்கிணைத்து பெண்கள் ஆதரவற்றோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு சிறப்பு முன்னுரிமை அளிக்கப்படும்.