​​​​​​உட்கட்டமைப்பு மேம்பாடு

நகர்ப்புற உட்கட்டமைப்புகளை உருவாக்கி பராமரிப்பு மேற்கொள்வது நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு ஒரு பெருத்த சவாலாக உள்ளது. தரமான திறமையான உட்கட்டமைப்புகளுக்கு அரசு முன்னுரிமை வழங்குகிறது. மைய /மாநில அரசு மற்றும் வெளி நிதி நிறுவனங்களான உலக வங்கி உதவியுடனான தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் III (TNUDP III), ஜெர்மானிய வங்கி நிதியுதவி (KfW), ஜப்பான் பன்னாட்டு கூட்டுறவு முகமை (JICA) முதலானவைகளின் மூலமாக பெறப்படக் கூடிய நிதியுதவியைக் கணக்கில் கொண்டு நகர்ப்புற உள்ளாட்சிகளில் உட்கட்டமைப்புப் பணிகள் எடுத்துக் கொள்ளப்படுகின்றன.

 

சிறப்பு உட்கட்டமைப்புப் பணிகள்
நவீன எரிவாயு தகனமேடை அமைத்தல்

சுற்றுப்புறச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாக, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்படுகின்றன. இதன்மூலம் விறகுகளின் பயன்பாடு 50 சதவீதத்திற்கு மேலாக குறைகிறது.

2012-2013ஆம் ஆண்டில் உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி மற்றும் இயக்குதல் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி மற்றும் பகுதி -2 திட்டத்தின் கீழ் ரூ.12.79 கோடியில் 19 (எண்ணிக்கை) நகர்ப்புற உள்ளாட்சியிலும் நவீன தகன எரிவாயு மேடை அமைத்திடும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

2013-14ஆம் ஆண்டில் 5 நகராட்சிகளில் நவீன தகன எரிவாயு மேடை அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.

நவீன இறைச்சிக் கூடம் அமைத்தல்

சுகாதாரமான முறையில் இறைச்சிக் கூடங்களை நடத்த அனைத்து நகர்ப்புற உள்ளாட்சிகளிலும் நவீன இறைச்சிக் கூடங்களை அமைக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.

2012-2013ஆம் ஆண்டில், இயக்குதல் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி மற்றும் பகுதி-2 திட்டத்தின் நிதியின் கீழ் பின்வரும் 18 நகர்ப்புற உள்ளாட்சிகளில் 20 நவீன இறைச்சிக் கூடங்கள் கட்டும் பணிகள் ரூ.7.93 கோடி செலவில் எடுத்துக்கொள்ளப் பட்டுள்ளது.

2013-14ஆம் ஆண்டில் 5 நகராட்சிகளில் நவீன இறைச்சிக் கூடங்கள் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

பகுதி-II திட்டங்கள்

மாநிலத் திட்டக் குழு பகுதி 2 திட்டங்களுக்கான திட்டவரைவுகளை தலைமைச் செயலக துறைகளிடமிருந்து பெற்று பரிசீலிக்கிறது. இதில் வளர்ச்சிப் பணிகளுக்கான செலவினங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இவை மக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் தன்மையதாகும் துறைத்தலைவர்கள் மற்றும் செயலாளர்களின் கலந்தாலோசனையின்  பேரில்  மாநிலத் திட்டக்குழு புதிய திட்டங்களை பரிந்துரைக்கிறது. இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான நிதிநிலைப்பாட்டு குழுவின் பரிந்துரைக்கு உட்படுத்தப்படுகிறது. நிதிநிலைப்பாட்டு குழுவின் பரிந்துரையின் பேரில், அத்தியாவசிய தேவையான முடிவு செய்யப்படும் திட்டங்கள் மட்டும் தற்காலிமாக பகுதி 2 திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நிதி ஒதுக்கீட்டில் சேர்த்துக் கொள்ளப்படுகிறது.

2012-13ஆம் ஆண்டில் பகுதி-II திட்டத்தின் கீழ் ரூ.13.58 கோடியில் பல்வேறு பணிகள் கீழ்க்கண்டவாறு நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு அரசால் அனுமதிக்கப் பட்டுள்ளது.

 

2013-2014ஆம் ஆண்டிற்கான பகுதி - II திட்டம்

2013-14-ம் ஆண்டில் இனம் 1-ன் கீழ் பொதுவான வழக்கமான திட்டச் செயல்பாடுகளுக்கான செலவினமும், இனம் 2-ன் கீழ் சிறப்பு மற்றும் புதிய முற்போக்கான தன்மையுடைய திட்டங்களின் செயல்பாட்டிற்கும் என இரு இனங்களில் நிதி ஒதுக்கீடு வழங்கப்படுகிறது

துறைசார்ந்த திட்டத் தேவைகளின் தன்மைகளை ஆய்ந்து, முன்னுரிமை அடிப்படையில் மாநிலத் திட்டக்குழு புதிய திட்டங்களை பரிந்துரைக்கிறது, இவ்வாறு பரிந்துரைக்கப்பட்ட திட்டங்கள் அரசினால் அங்கீகரிக்கப்படுகிறது.

2013-14-ம் ஆண்டில் பொதுவான/வழக்கமான தன்மையதான திட்டங்களுக்காகவும், சிறப்பு மற்றும் முற்போக்குத் திட்டங்களுக்காகவும், பல்வேறு திட்டங்களை செயல்படுத்திட ரூ.12 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

இடைவெளி நிரப்பும் நிதி

நிதி தேவை மற்றும் நிதி இருப்பு இடையே உள்ள இடைவெளியை நிரப்பும் பொருட்டு, இரண்டு தனி நிதியினை, உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி மற்றும் இயக்குதல் (ம) பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி அரசு உருவாக்கியுள்ளது.

அரசு அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் இயக்குதல் மற்றும் பராமரிப்பு நிதியில் நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு நிதி பகிர்ந்தளிக்கப்படுகிறது.

வழிகாட்டல்கள்:

  • நிதி ஆதாரம் பின்தங்கிய உள்ளாட்சி அமைப்புகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த நிதி ஒதுக்குதல்
  • பெருமளவில் தேவையான அடிப்படைக் கட்டமைப்பு திட்டம்
  • உடனடியாக தேவைப்படும் திட்டப்பணிகளுக்கு நிதி ஒதுக்குதல்
  • திட்டப் பணியைப் பொறுத்து பராமரிப்புப் பணிகளுக்குத் தேவையான நிதி ஆதாரம் இல்லாத பணிகளுக்கு நிதி ஒதுக்குதல்
உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதி

2012-13ஆம் ஆண்டில் உட்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியில் ரூ.62.73 கோடி ஒதுக்கீடு செயய்யப்பட்டு 125 நகராட்சிகளில் 1,051 பணிகள் நடைபெற்று வருகின்றன.

 

2013-14ஆம் ஆண்டில் பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்ள ரூ.73.25 கோடி அனுமதிக்கப் பட்டுள்ளது.

இயக்குதல் (ம) பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதி

2012-13ஆம் ஆண்டில் இயக்குதல் (ம) பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் 34 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 37 பணிகள் ரூ.41.82 கோடி மதிப்பீட்டில் கீழ்க்காணும் பணிகள் செயலாக்கத்திற்கு எடுத்தக் கொள்ளப்பட்டுள்ளன.

 

மேற்கண்ட பணிகள் தொடங்கப்பட்டு பல்வேறு நிலைகளில் நடைபெற்று வருகின்றன. 2013-14ஆம் ஆண்டில் இயக்குதல் (ம) பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியின் கீழ் ரூ.48.83 கோடி பல்வேறு உட்கட்டமைப்பு பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.