​​​​​​​​நகர்ப்புற நிதி

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரியினங்கள் மூலமும், பகிர்மான வரவினங்கள், தீர்வைகள் மற்றும் கட்டண இனங்கள் மூலமும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மூலம் பெறப்படும் கடன் மற்றும் மானியங்கள் மூலமும் நிதி ஆதாரம் கிடைக்கின்றன.

இதில் பெரும்பான்மையான நிதி, கீழ்க்கண்ட இனங்கள் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு கிடைக்கின்றது.

  1. வரி மற்றும் வரியில்லா இனங்கள் (சுய நிதி மூலம்)
  2. மாநில அரசின் மூலம் பெறப்படும் பகிர்வு (மாநில நிதிக் குழு மானியம்)
  3. மத்திய அரசினால் வழங்கப்படும் மானியம் (13 வது மத்திய நிதிக் குழு மானியம்)
  4. மத்திய மாநில அரசால் வழங்கப்படும் சில குறிப்பிட்ட மானியங்கள்
  5. மாநில அரசு மற்றும் நிதி அமைப்புகள் மூலம் பெறப்படும் கடன்
நிதி ஆதாரங்கள்

2012-13ஆம் ஆண்டில் 9 மாநகராட்சிகள் மற்றும் 125 நகராட்சிகளுக்கான நிதி ஆதாரங்கள் ரூ.4,286.00 கோடியாகும். இதில் கீழ்க்காணும் வரவினங்கள் அடங்கும்.

 

மாநில நிதிக்குழு பரிந்துரை மான்யம்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 243 Y கூறின்படி நகராட்சிகளின் நிதி நிலையை ஆய்வு செய்வதற்கு அமைக்கப்பட்ட மாநில நிதி குழு பரிந்துரைகளை வழங்கும்.

நான்காவது மாநில நிதிக்குழுவின் பரிந்துரைகள் 2012-2017-ஆம் ஆண்டு காலகட்டத்தில் செயல் படுத்தப்படும். நான்காவது நிதிக்குழு பரிந்துரைகளின்படி, மாநிலத்தின் சொந்த வரிவருவாயிலிருந்து வழங்கப்படும் நிதி ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 58:42 என்ற விகிதத்தில் பகிர்ந்தளிக்கப்படுகிறது.

2013-2014ஆம் ஆண்டில் நிதி நிலை அறிக்கையில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு ரூ.2441.95 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பதிமூன்றாவது மத்திய ஆணையத்தின் பரிந்துரைகள்

தமிழ்நாட்டிலுள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு 13வது மத்திய நிதிக்குழுவின் பரிந்துரைகளின் படி மத்திய அரசு 2010-2011 முதல் 2014-2015 நிதி ஆண்டுகளுக்கு கீழ்க்கண்டவாறு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.

 ​​

2012-2013ஆம் ஆண்டில் மாநகராட்சி மற்றும் நகராட்சிகளுக்கு ரூ.219.37 கோடி நிதி விடுவிக்கப் பட்டுள்ளது. 2013-14ஆம் ஆண்டுக்கு நிதி நிலை அறிக்கையில் ரூ.429.13 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.