​​​​​பாதாள சாக்கடைத் திட்டம்

சுகாதார வசதியை மேம்படுத்த ஏதுவாக இந்த அரசானது அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சுத்திகரிப்பு நிலையத்துடன் கூடிய பாதாள சாக்கடைத் திட்டத்தினை பல்வேறு கட்டங்களாக செயல்படுத்திட முனைந்துள்ளது. பாதாள சாக்கடைத் திட்டத்தினை செயல்படுத்துவதன் முக்கிய குறிக்கோள் சுகாதாரக் கேடுகளைக் குறைப்பதும், நிலத்தடி நீர் மாசுபடுவதைத் தடுப்பதும், மக்களின் பொது சுகாதாரம் மற்றும் தூய்மையான சூழ்நிலையை மேம்படுத்துவதும் ஆகும்.

பாதாள சாக்கடைத் திட்டங்களின் செயலாக்கம்

தமிழக அரசின் கொள்கை முடிவின்படி படிப்படியாக அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பாதாள சாக்கடைத் திட்ட வசதி செயல்படுத்தப்படும்.

ugss.png

2012-13ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட 22 நகரங்களில் நிதியாதாரம் முடிவு செய்யப்பட்ட 4 நகரங்களின் விவரம் பின்வருமறு:-

ug222.png

மீதமுள்ள 18 நகரங்களுக்கான நிதி ஆதாரம் முடிவு செய்யப்பட்டு வருகிறது.

நவீன தொழில்நுட்ப முறையான குடைவு தொழில் நுட்பம் மூலம் குழாய் பதித்தல், அச்சுவார்த்த மனித நுழைவு அமைப்புகள் மற்றும் HDPE குழாய்கள் அமைப்பது மற்றும் இதர முன்னோடி நவீன முறைகளைப் பயன்படுத்திட தீவிர பரிசீலனையில் உள்ளது.