​​​​​​​சுகாதாரம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை

நகரங்கள் சுகாதாரமாக மக்கள் வாழ்வதற்கு ஏதுவான விதத்தில் இருந்திட வேண்டும் எனும் தொலைநோக்கு கொள்கைக்கு அரசு முன்னுரிமை வழங்கி வருகிறது. இதனை உறுதி செய்ய, திறந்தவெளியில் மனித கழிவு கழிக்காமை மற்றும் குப்பை இல்லா சுற்றுச் சூழல் ஆகியவற்றை உருவாக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

திறந்தவெளியில் மனிதக்கழிவு கழிப்பதை ஒழித்தல்

தமிழ்நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும், உரிய அழுத்தத்துடன் குழாய்கள் மூலம் பாதுகாக்கப்பட்ட குடிநீர் 24x7 வழங்குதலை உறுதி செய்வதும், அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான சுகாதார வசதி கிடைக்கச் செய்வதோடு திறந்த வெளியில் மனிதக்கழிவு கழிக்கும் நிலை இல்லாத மற்றும் குப்பை கூளங்கள் இல்லாத சூழலில், வாழ்வதை உறுதி செய்வதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தொலை நோக்கு பார்வையாகும்.

மேற்குறிப்பிட்ட குறிக்கோளை அடைய நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்கள் தேசிய வடிவமைப்பு நிறுவனம் அகமதபாத் நிறுவனத்திடம் தமிழ் நாட்டில் நாகரிக பொருத்துதல் பற்றி கலந்து ஆலோசித்து, பல்வேறு பயன்பாட்டில், உள்ள வெளி அதிகாரிகள் தொழில் நுட்ப ஆலோசகர்கள் , விற்பனை சிறந்தாளர்கள், சிற்பிகள் நம்ம டாய்லெட் என்ற பெயரில் பொதுவான கழிப்பிட வடிவமைப்பு செயல்பட்டது. பொதுவான வடிவமைக்கப்பட்ட கழிப்பிடம் நகர்ப்புற ஏழை மக்களுக்காக ஏற்படுத்தியதாகும்.

முன் தயாரிக்கப்பட்ட கழிப்பிடம் எளிதாக, குறுகிய நேரத்தில் பொருந்தக் கூடியது.

2012-13ஆம் ஆண்டில், 108 நகராட்சிகளில் உள்ள பொது கட்டடங்களில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான 333 கழிவறைகள் கட்ட ரூ.8.19 கோடி அனுமதிக்கப்பட்டது. மேலும், மாநகராட்சி மற்றும் நகராட்சிகளில் 652 கழிவறைகளைப் புதுப்பித்திடவும், நவீன யுக்தியோடு 404 புது கழிப்பிடங்களைக் கட்டவும், தண்ணீர் செலவாகாத சிறுநீர் கழிப்பிடங்கள் கட்டவும் ரூ.50.89 கோடி அனுமதிக்கப்பட்டது. 2013-14ஆம் ஆண்டிலும், இத்திட்டம் ரூ.50.00 கோடி மதிப்பீட்டில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

திடக்கழிவு மேலாண்மை

திடக்கழிவு மேலாண்மைக்கு அரசு தொடர்ந்து முன்னுரிமை வழங்கி வருகிறது. முதற்கட்ட சேகரிப்பு மற்றும் இரண்டாம் கட்ட சேகரிப்பு நடவடிக்கைகளை மேம்படுத்த ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.187.18 கோடி அனுமதிக்கப்பட்டது.

199 பார உந்துகள் (டிப்பர் லாரிகள்), 175 கொட்டும் வைப்பு வாகனங்கள் (டம்பர் பிளேசர்), 71 காம்பாக்டர்கள், 58 முன் பளுதூக்கி இயந்திரங்கள், 12 கழிவு நீர் பார உந்துகள், 4,528 தள்ளு வண்டிகள், 857 மூன்று சக்கர மிதிவண்டிகள் 10,420 கொள்கலன்கள் முதலானவை வாங்கப்பட்டு சேகரிப்பு மற்றும் இட மாற்று பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

திருநெல்வேலி மாநகராட்சியில் குப்பையிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் திட்டம் அரசால் அறிவிக்கப்பட்டு ரூ.55.00 கோடி மதிப்பீட்டில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

திருச்சிராப்பள்ளி, திருப்பூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் மாநகராட்சி மற்றும் நாகர்கோவில் நகராட்சியில் தெரிவு செய்யப்பட்ட இடங்களில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் செயல்படுத்திட விரிவான திட்ட அறிக்கை தயாரித்திட கலந்தாலோசகர் நியமிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த திடக்கழிவு மேலாண்மை செயல்திட்டம் குறித்த கொள்கை அரசின் பரிசீலனையில் உள்ளது. விரைவில் செயலாக்கத்திற்கு எடுத்துக்கொள்ளப்படும்.

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க நிதி நிலைமை வலுவாக இல்லாத நகராட்சிகளில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டப் பணிகளை செயல்படுத்த 2013-14ஆம் ஆண்டில் ஒரு சிறப்பு திடக்கழிவு மேலாண்மை நிதி ரூ.100 கோடி ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்படும்.