​​​​​​​​​​​​​​தகவல் அறியும் உரிமை சட்டம்

தகவல் அறியும் உரிமைச் சட்டம், இந்திய நாடாளுமன்றத்தால் அரசிடம் அல்லது அரசு உதவிபெறும் நிறுவனங்களிடமிருந்து மக்கள் உரிமையுடன் அறிந்து கொள்வதற்கு ஏதுவாக்க உருவாக்கப்பட்ட சட்டம் ஆகும்.

1.1 மக்களுக்கு தேவையான தகவல்களை தேவையான பொழுது அளிப்பதற்கு நகராட்சி நிர்வாக இயக்குனரக ஆணையாளர் 24 கண்காணிப்பாளர்களை பொது தகவல் அலுவலர்களாக (PIO) நியமித்துள்ளார்.

1.2 பொது தகவல் அலுவலர்

rtit.png 

RTI_ta_2a.png
 

RTI_ta_3a.png
 

RTI_ta_4a.png
 

RTI_ta_5a.png
 

RTI_ta_6a.png
 

RTI_ta_7a.png
 

1.3. நகராட்சி நிர்வாக இயக்குனரகம் சம்பந்தப்பட்​ட திட்ட அம்சங்கள் தொடர்பாக ஆர்டிஐ சட்டம் மூலம் தகவல் வேண்டுபவர் தனது பிரதிநிதித்துவத்தை சம்பந்தப்பட்ட பொது தகவல் அதிகாரிகளுக்கு சேப்பாக்கம் சி.எம்.ஏ அலுவலகம், எழிலகம் இணைப்பு, சென்னை-5 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

1.4 தகவல் பெறும் முறையும், அதற்கு செலுத்த வேண்டிய கட்டணமும் கீழ்கண்டவாறு தரப்பட்டுள்ளது:-

 1. ஆர்டிஐ சட்டம் பிரிவு 6ன் துணை பிரிவு (1)ன்கீழ், தகவல் பெற வேண்டுபவர் எழுத்து மூலமாகவோ மின்னனு மூலமாகவோ அட்டவணை 1.2ல் குறிப்பிட்டபடி பொது தகவல் அதிகாரிக்கு ஒரு வேண்டுகோளை அனுப்பவேண்டும். மேற்கூறிய வேண்டுகோளுடன், அதற்குரிய கட்டணம் ரூபாய் 10ஐ நீதிமன்ற கட்டணம் தபால் தலை அல்லது வரையோலை அல்லது வங்கியாளர் காசோலையாகவோ இணைக்கவேண்டும். பொது தகவல் அதிகாரி கீழ்கண்ட கணக்கில் கட்டணத்தை வரவு வைப்பார்:-
 2. "0075.00 பல்வகை பொது சேவைகள்-800. மற்ற ரசீதுகள் பிகே. தமிழ்நாடு தகவல் அறியும் உரிமை சட்டம் (கட்டணங்கள்) விதிகள்-2005; கீழ் வசூலிக்கப்படும் கட்டணம் (டிபிசி 007500 800 பிகே 0006)"​

  மேற்கூறிய தலைமை வங்கி கணக்கில் விண்ணப்பதாரர் கருவூலம்/ சம்பள மற்றும் கணக்கு அலுவலகம்/ ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா/ இந்திய ரிசர்வ் வங்கி என்று எதன் மூலமாக கட்டணத்தை செலுத்தி, கட்டணம் செலுத்தியதற்கு ஆதாரமாக சலானின் நகலை பொது தகவல் அதிகாரியிடம் தனது விண்ணப்பத்துடன் கொடுக்க வேண்டும்.

 3. தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 7 துணை பிரிவு (1)ன் கீழ் தகவல் பெற, 1.4(அ)ல் குறிப்பிட்டபடி வேண்டுகோள் அளித்து கீழே குறிப்பிட்ட கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  1. ஒவ்வொரு பக்கத்திற்கும் அல்லது நகலுக்கும் ரூபாய் 2 (ஏ4 அல்லது ஏ3 அளவு பக்கம்)
  2. பெரிய அளவு நகல் தாளின் அசல் விலை அல்லது செலவு
  3. மாதிரிகளின் அசல் செலவு மற்றும் and
  4. ஆய்வு பதிவுக்காக முதல் ஒரு மணி நேரத்துக்கு எந்த கட்டணமும் இல்லை அதன்பின் ஒவ்வொரு பதினைந்து நிமிடத்திற்கும் தலா ரூ.5/- (ஐந்து) கட்டணம்.
 4. தகவல் அறியும் உரிமை சட்டம் பிரிவு 7 துணை பிரிவு (5)ன் கீழ் தகவல் பெற, கீழே குறிப்பிட்ட கட்டணத்தை மேற்கூறிய முறையில் செலுத்த வேண்டும்.
  1. தகடு அல்லது நெகிழ் வட்டில் தகவல் பெற ஒவ்வொரு தகடு அல்லது நெகிழ் வட்டிற்கும் ரூ.50/-(ஐம்பது)
  2. அச்சிட்ட வடிவத்தில் தகவல் பெற ஒவ்வொரு பக்கத்திற்கும் ரூ.2/-

1.5 தகவல் அறியும் உரிமை சட்டம் 2005ன் கீழ் தகவல் பெற விரும்புபவர் வறுமைக் கோட்டிற்கு கீழ் நிலையில் இருந்தால் அவர் கட்டணம் செலுத்த தேவையில்லை. கிராம பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் ஒப்புதல் தந்த வறுமைக் கோட்டிற்கு கீழ் நிலை மக்கள் பட்டியல் இச்சலுகை பெற ஆதார அடிப்படையாக இருக்கும். இச்சலுகை பெற்றிட பட்டியலின் படிவம் முறையாக சான்றளிக்கப்பட்டு கிடைக்கும்.

1.6 நகராட்சி நிர்வாக ஆணையாளர் அவர்கள், நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர், நகராட்சி நிர்வாக ஆணையரகம், மேல்முறையீடு அதிகாரியாக சட்டத்தின் பிரிவு 9(1)ன்படி நியமித்துள்ளார். மேல்முறையீடு அதிகாரியின் தொடர்பு தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது:-

நகராட்சி நிர்வாக கூடுதல் இயக்குனர்
நகராட்சி நிர்வாக ஆணையரகம்
எழிலகம் இணைப்பு, சேப்பாக்கம், சென்னை-600005.
தொலைபேசி எண்: 044 28546529.
மின்னஞ்சல்: jcadmin.tncma@nic.in

1.7 நகராட்சி நிர்வாக ஆணையரகம் செயல்படுத்தும் அனைத்து வளர்ச்சி நடவடிக்கை திட்டங்கள் ஆகியவை குறித்த தகவல்கள் நகராட்சி நிர்வாக ஆணையரக வலைதளத்தில் மக்களின் பார்வைக்காக இணைக்கப்பட்டுள்ளது.

தகவல் பெறும் உரிமை கையேடு படிக்க இங்கே கிளிக் செய்யவும் ​http://www.tn.gov.in/rti/proactive/guidebook_rtiact.pdf

தகவல் பெறும் உரிமை கையேடு படிக்க இங்கே கிளிக் செய்யவும் ​​Handbook_MAWS.pdf

தகவல் பெறும் உரிமை கையேடு படிக்க இங்கே கிளிக் செய்யவும் ​http://rti.gov.in​