​​​​​​​​ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம்

​சென்னைப் பெருநகர் மற்றும் புறநகர் மேம்பாட்டுக்கென சென்னைப் பெருநகர வளர்ச்சித் திட்டம், இதர மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளுக்கான ஒருங்கிணைந்த நகர்ப்புற  ​​வளர்ச்சித் திட்டம் என இருபெரும் சிறப்புத் திட்டங்களை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் துவக்கியுள்ளார்கள். நகரங்களில் தேவைப்படும் உட்கட்டமைப்பு வசதிகளான சாலைகள், குடிநீர், தெருவிளக்குகள், கழிவு நீர், மழைநீர் வடிகால்கள், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை பேருந்து நிலைய அபிவிருத்தி, பூங்காக்கள் முதலானவற்றை ஒருங்கிணைந்த முறையில் மேம்படுத்த இந்த இரண்டு திட்டங்களும் வழிவகுக்கின்றன.

ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் ​ 2012-13ன் கீழ் எடுத்துக் கொள்ளப்பட்ட இன வாரியான திட்டங்கள் பின்வருமாறு:-

IUDM1.png

கடந்த இரு ஆண்டுகளில் பல்வேறு நகர்ப்புற கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ. 1000 கோடி வழங்கப்பட்டது. 2011-12ல் மேற்கொள்ளப்பட்ட பெரும்பாலான பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. 2012-13ல் எடுத்துக் கொள்ளப்பட்டவை முன்னேற்றத்தில் உள்ளன.