​​​​​​​பொறியியல்

கீழ் காணும் தொடர்புடைய கோப்புகள் பொறியியல் பிரிவில் பார்க்கப்படுகிறது.

இ - பிரிவு பொறியியல் (இயற்கை சீற்றம், தெரு விளக்குகள், சாலைகள் அமைத்தல், ஒப்பந்ததாரர்களின் குறைகள் நிவர்த்தி)
 • தெரு விளக்குகள் பராமரித்தல்.
 • ஒருங்கிணைந்த நகர்புற வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு நகர்புற சாலை மேம்பாட்டு திட்டம், பிளாஸ்டிக் சாலைகள், சாலை குறியீடு
 • வறட்சி மற்றும் வெள்ள நிவாரணம்
 • நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் மண்டல நகராட்சி நிர்வாக இயக்குநரகங்களுக்கு புதிய கட்டிடம் கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
யு.ஜி.எஸ்.எஸ் - பிரிவு: பாதாள சாக்கடை திட்ட பிரிவு
 • பாதாள சாக்கடை பணி சம்பந்தப்பட்ட அனைத்து கோப்புகள்.
 • பராமரிப்பு மற்றும் ஆய்வு சம்பந்தமான செலவினங்கள் சென்னை குடிநீர் மற்றும் வடிகால் கழிவு நீரகற்று வாரியத்திற்கு CMWSSB செலுத்துதல்.
 • நிதி ஆதாரம் மற்றும் தொழில்நுட்ப சாத்திய கூறு சம்பந்தப்பட்ட கோப்புகள்.
டபிள்யு.எஸ் - பிரிவு: நீர் திட்டப் பிரிவு
 • குடிநீர் விநியோக திட்டங்கள், மழை நீர் சேகரிப்பு
 • வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களுக்கு குடிநீர் விநியோகம், அவற்றின் முன்னேற்றம் கண்காணிப்படுதல்.
 • தற்போது நடைமுறையில் உள்ள, நடைபெற்று வரும் குடிநீர் விநியோக திட்டங்களுக்கான நிதி ஆதாரம் மற்றும் தொழில்நுட்ப திறனை ஆராய்தல்.
 • தமிழ் நாடு குடிநீர் மற்றும் வடிகால் வாரியத்திற்கு செலுத்தப்பட வேண்டிய ஆய்வு கட்டணங்கள் மற்றும் பராமரிப்பு கட்டணங்கள்.
 • குடிநீர் தீர்வை வசுலித்தலை கண்காணித்தல்.
 • குடிநீர் விநியோக துணை விதிகளுக்கு அங்கீகாரம் வழங்குதல் (மூன்றாம் நிலை நகராட்சிகள் உட்பட)

 

தி – பிரிவு (P) : திட்டம்

இதன் முக்கிய நடைமுறைகள்:

 • அனைத்து திட்ட பணிகள் / அரசால் அறிவிக்கப்படும் புதிய திட்டங்கள்
 • குறிப்பிட்ட திட்டங்களுக்கான நிர்வாக அனுமதி, ஆய்வு கூட்டம்
 • திட்ட அறிக்கைகளை தயாரித்து ஒருங்கிணைத்தல்.
 • ஐந்து வருட திட்டம் , பகுதி II திட்டம், மலைபகுதிகளுக்கான முன்னேற்ற திட்டம் (HADP)

மேலே உள்ள பிரிவுகளின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது:

 

பிபிசி (PPC) - பிரிவு:
 • நகராட்சி நிர்வாகத்துறை சம்பந்தப்பட்ட புள்ளிவிவரங்கள் சேகரித்தல் மற்றும் தொகுத்தல்.
 • நகராட்சி கையேடு தயாரித்தல் மற்றும் அவ்வப்போது பிற துறையினரால் கோரப்படும் புள்ளி விவரங்கள் அளித்தல்.
 • நகராட்சி நிர்வாகத்துறைக்கான கொள்கை விளக்க குறிப்பு, நிதி நிலை அறிக்கை உரை மற்றும் செயல்திறன் குறிப்பு தயாரித்தல்.
டபில்யூ பி - பிரிவு: உலக வங்கி திட்டம், தமிழ் நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் - III
 • தமிழ் நாடு நகர்ப்புற வளர்ச்சி திட்டம் - III க்கான நிதி மற்றும் முன்னேற்றங்களை கண்காணித்தல்.
ஐ.எச்.எஸ்.டி.பி - பிரிவு: ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டம்
 • ஒருங்கிணைந்த வீட்டு வசதி மற்றும் குடிசை பகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பெறப்படும் நிதியை செயலாக்க முகமைகளுக்கு விடுவித்தல்.
 • நகர்ப்​புற எழைகளுக்கான அடிப்படை திட்டத்தின் கீழ் நிதி விடுவித்தல்
 • மத்திய அரசு திட்​டமான ஜவஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்தில் நிதி.

மேற்காணும் திட்டங்கள் மேல் அலுவருக்கு கீழ்காணும் பிரிவுகள் மூலமாக மேல் அனுப்பப்படுகின்றது.

நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது: