​​நிர்வாகம் / பணி அமைப்பு

நிர்வாகம் / பணி அமைப்பு துறையின் முக்கிய செயல்பாடுகள்:

 • உரிய அதிகாரிகள் அமைத்தல்.
 • பணிமாற்றம் மற்றும் பணி அமர்த்தல், ஆட்சேர்ப்பு குழு தயாரித்தல்
 • நகராட்சி பொறியாளர் சம்பந்தபட்ட நீதிமன்றம் விவகாரம், புகார்கள் / ஒழுங்கு வழக்குகள் பராமரிப்பு
 • அனைத்து கண்காணிப்புத்துறை புகார்கள் / மனுக்கள்

பின்வருபவை நகராட்சி நிர்வாகம் ஆணையரகத்தில், நிர்வாகம் மற்றும் பணி அமைப்பு துறையின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள குறிப்பிட்ட பிரிவுகள்:

சி பிரிவு - நகராட்சி ஆணையர் பணி அமைப்பு
 • அனைத்து நகராட்சி ஆணையாளர்கள் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரர்களின் மந்தன அறிக்கை பராமரித்தல்
 • நகராட்சி ஆணையர் / நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரர்கள் எதிரான ஒழுங்கு நடவடிக்கை.
 • ஆணையாளர்கள் ஊதிய நிர்ணயம்
 • பணிவரலாறு - பணியாளர்கள் தொகுதி பட்டியல் - கட்டாய காத்திருப்பு காலம் - தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பட்டியல் மற்றும் தமிழ்நாடு அரசு ஊழியர் நடத்தை விதிகள் தொடர்பான அனைத்து சம்பவங்கள்.
 • துறை பதவி உயர்வுக் குழு
 • நகராட்சி ஆணையர்கள் அனைத்து வகையான விடுப்புகளையும் அனுமதித்தல், விடுப்பு கால பயணச் சலுகை, ஊதியம் நிர்ணயம் செய்தல்.
ஓ.பி. (அ.ந ) பிரிவு: அலுவலக நடைமுறை நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரகம்
 • நகராட்சி நிர்வாக ஆணையர் பணியாளர்களின் பணி நியமனங்கள் மற்றும் பணி விவரம்
 • பணியிடங்கள் தோற்றுவித்தல். பணியிடங்கள் தொடர்ந்து நீட்டிப்பு
 • நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக பணியாளர்கள் குறித்த புகார் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை குறித்து
 • நகராட்சி நிர்வாக ஆணையரக பணியாளர்களின் விடுப்புகள் அனுமதி.
 • மோட்டார் வாகனங்கள் மற்றும் எழுது பொருட்கள்
 • அதிகாரிகளின் மந்தன அறிக்கை பராமரித்தல்
 • நகராட்சி நிர்வாக ஆணையர் அலுவலக பணியாளர்களின் பணி நியமனங்கள் மாற்றங்கள் குறித்த
 • தொலைபேசி - தொலைஅச்சு மற்றும் நகராட்சி நிர்வாக ஆணையரக பணியாளர்களின் பிறந்த தேதி மாற்றுதல் குறித்து.
மனு பிரிவு
 • தகவல் அறியும் உரிமைச் சட்டப்பிரிவின் கீழ் பெறப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுத்தல்.
 • முதல்அமைச்சர் தனிபிரிவு மனு

மேலே உள்ள பிரிவுகளின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது:

 

• (எப்) பிரிவு - நகராட்சி / மாநகராட்சி பொறியாளர்கள் பணி அமைத்தல்
 • நகராட்சி / மாநகராட்சி பொறியாளர்கள் சம்பந்தப்பட்ட பணி அமைப்பு
 • நகராட்சி / மாநகராட்சி பொறியியல் பிரிவில் பணிபுரியும் அனைத்து பணியாளர்கள் வயது முதிர்வு ஓய்வு மற்றும் விருப்ப ஓய்வு பெற அனுமதி அளித்தல்.
எச் - பிரிவு
 • தமிழ் நாடு நகராட்சி மருத்துவப் பணிகள் தொடர்பான பணியமைப்பு
 • நகராட்சி மருத்துவ மையங்கள் திடீர் ஆய்வு
 • பணியிடையில் காலமான ஊழியர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் பணி வழங்கல்
 • நகராட்சி மருத்துவமனைகள் மற்றும் மருத்துவ மையங்களின் பராமரிப்பு
 • மேலே உள்ள பிரிவுகளின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது:

   

கே - பிரிவு: நகராட்சி பணியாளர் தொகுதி
 • தமிழ்நாடு நகராட்சி பொதுபணியின் கீழ் வகுப்பு I முதல் வகுப்பு X வரை நகராட்சிகளில் பணிபுரியும் பணியாளர் தொகுதி தொடர்பான அனைத்துப் பொருள்கள்.
 • வயது முதிர்வின் காரணமாக ஓய்வு, தன் விருப்ப ஓய்வு - வயது வரம்பு தளர்வு, லஞ்ச ஒழிப்புத் துறை அனை​த்து புகார்கள்/மனுக்கள்.

மேலே உள்ள பிரிவின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது:​