​​கணக்கு

நகராட்சி நிர்வாக ஆணையரகத்தின் கணக்கு பிரிவில் பின்வரும் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

ஏ - பிரிவு: பணியாளர்களின் ஊதியம் தொடர்பான பணிகள்.

பின்வரும் பட்டியல்கள் இந்த பகுதியில் தயார் செய்யப்படுகின்றன:

 • பணியாளர்களின் ஊதிய பட்டியல் தயாரித்தல்
 • பணியாளர்களின் ஊதியமில்லா இதர பட்டியல்கள் தயாரித்தல்
 • பணியாளர்களின் பொது வருங்கால வைப்பு நிதி பட்டியல் தயாரித்தல்
 • பணியாளர்களின் சரண் விடுப்பு / ஈட்டிய விடுப்பு பட்டியல் தயாரித்தல்
 • பணியாளர்களின் பயணப் படி பட்டியல் தயாரித்தல்
 • இடமாறுதல் பயணப் படி பட்டியல் தயாரித்தல்
 • விடுப்பு கால பயண சலுகை பட்டியல் தயாரித்தல்
 • சில்லறை செலவின பட்டியல், தொலைபேசி பட்டியல், எரிபொருள் செலவின பட்டியல் முதலியன தயாரித்தல்
 • மருத்துவ காப்பீடு தொடர்பான கோப்புகள் பேணுதல்
 • மாநில நிதி குழுவால் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்படும் தொகைக்கான பட்டியல் தயாரித்தல்.

மாநில மற்றும் மத்திய அரசின் நிதி உதவியுடன் உள்ளாட்சி அமைப்புகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பான சில்லறை செலவின பட்டியல்கள் தயாரிக்கும் பொருட்டு, சம்பந்தப்பட்ட பிரிவுகளிலிருந்து நகராட்சி நிர்வாக ஆணையரால் ஒப்புதல் அளிக்கப்பட்டு பெறப்படும் செயல்முறை ஆணைகளின்படி உரிய பட்டியல்கள் தயாரித்து சம்பள கணக்கு அலுவலகத்திற்கு அனுப்பும் பணியையும் 'ஏ' பிரிவு மேற்கொண்டு வருகிறது. மேற்கண்ட பட்டியல்கள் சம்பள கணக்கு அலுவலகத்திலிருந்து இசிஎஸ் (ECS) மூலமாக சம்பந்தப்பட்வர்களுக்கு அனுப்பப்படுகிறது.

எல் – பிரிவு
 • 9 மாநகராட்சிகள் மற்றும் அனைத்து நகராட்சிகளில் நிலுவையிலுள்ள தணிக்கை தடைகள் நிவர்த்தி செய்தல்
 • உயர் மட்டக்குழு கூட்டம் நடத்துவது.

மேலே உள்ள பிரிவுகளின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது:

 

பி - பிரிவு: ஓய்வூதிய பயன்கள் சம்பந்தப்பட்டவை
 • ஓய்வுபெற்ற நகராட்சி ஆணையர் தற்காலிக ஓய்வூதியம் / நகராட்சி நிர்வாக ஆணையரக மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரக பணியாளர்களின் ஓய்வூதிய கருத்துரு மாநில கணக்காயருக்கு அனுப்புதல் / அனுமதிக்கப்பட்ட
 • ஓய்வூதிய பயன்கள் / பணிக்கொடை / சிறப்பு சேம நல நிதி பெற அனுமதி வழங்குதல்.
 • நகராட்சி நிர்வாக ஆணையரகம் மற்றும் நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனரக அலுவலகப் பணியாளர்களின் முன்பணம் வழங்க அனுமதி வழங்குதல்.
 • நகராட்சி நிர்வாக ஆணையரக பணியாளர்களுக்கு ஊதிய நிர்ணயம் / வருடாந்திர ஊதிய உயர்வு /சேம நல நிதி /ஊதிய முரண்பாடு / மருத்துவ அடையாள அட்டை / பங்கு தொகை வருங்கால வைப்பு நிதி பெற்று வழங்குதல்
 • நகராட்சி பணியாளர்களின் ஓய்வூதியம் குறித்த புகார்கள் மற்றும் தற்காலிக ஓய்வூதியம் அனுமதித்தல் / பணிக்கொடை குறித்த புகார்கள் மீது நடவடிக்கை / ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் குறித்த
 • நகராட்சி பணியாளர்களின் வழக்குகள்.

மேலே உள்ள பிரிவின் நிறுவன படிநிலை கீழே தரப்பட்டுள்ளது: