நகராட்சி  நிர்வாக ஆணையரகம்


        நகராட்சி நிர்வாக ஆணையரகம், மாநிலத்தில் உள்ள அனைத்து நகராட்சிகள் மற்றும் மாநகராட்சிகளின் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும் மற்றும் மேற்பார்வையிடும் துறைத் தலைமையாக செயல்படுகிறது.  நகராட்சி நிர்வாக ஆணையரகம், நகராட்சி நிர்வாக ஆணையர் அவர்களை தலைவராகவும் மற்றும்  இணை ஆணையர்கள், கூடுதல் இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் மற்றும் ஏழு நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களை (மண்டலத்திற்கு ஒருவர் என செங்கல்பட்டு, வேலுhர், சேலம், திருப்பூர், தஞ்சாவூர், மதுரை மற்றும் திருநெல்வேலி மண்டலங்கள்) கொண்டுள்ளது.
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி மாநகராட்சிகளின் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) மக்கள் தொகை 80,65,843 ஆகும். இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 11.18 சதவீதமாகவும், மொத்த நகர்ப்புர மக்கள் தொகையில் 23.08 சதவீதமாகவும் மற்றும் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.10 சதவீதமாகவும் உள்ளது. மாநகராட்சிகள் (சென்னை மாநகராட்சி நீங்கலாக) மொத்தம் 1,278.34 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. இது மாநிலத்தின் மொத்த நகர்ப்புர நிலப்பரப்பில் 9.38 சதவீதமாகும்.
2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நகராட்சிகளின் மக்கள் தொகை 90,18,646 ஆகும். இது மாநிலத்தின் மொத்த மக்கள் தொகையில் 12.50 சதவீதமாகவும், மொத்த நகர்ப்புர மக்கள் தொகையில் 25.80 சதவீதமாகவும் மற்றும் வருடாந்திர வளர்ச்சி விகிதம் 1.02 சதவீதமாகவும் உள்ளது.  நகராட்சிகள் மொத்தம் 2560.12 சதுர கி.மீ. பரப்பளவில் அமைந்துள்ளன. இது மாநிலத்தின் மொத்த நகர்ப்புர நிலப்பரப்பில் 18.78  சதவீதமாகும்.
          தமிழ்நாட்டில் 11 மாநகராட்சிகள் (சென்னை நீங்கலாக) மதுரை, கோயம்புத்துhர், திருச்சிராப்பள்ளி, திருநெல்வேலி, சேலம், திருப்பூர், ஈரோடு, வேலுhர், துhத்துக்குடி, திண்டுக்கல்,  தஞ்சாவூர் மற்றும் 124 நகராட்சிகள், நகராட்சி நிர்வாக ஆணையரின்  நிர்வாக கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகின்றன.  மாநிலத்தில் உள்ள நகராட்சிகள் ஆண்டு வருமானத்தின் அடிப்படையில் கீழ்காணுமாறு தரம் பிரிக்கப்பட்டுள்ளது. 

வ. எண்.தரம்ஆண்டு வருமானம் (` கோடியில்)நகராட்சிகளின் எண்ணிக்கை
1சிறப்பு நிலை10.00 க்கு மேல்17
2 தேர்வு நிலை 6.00-10.00 33
3முதல் நிலை4.00-6.0029
4இரண்டாம் நிலை4.00க்கு கீழ்45
மொத்தம்124